ஜித்தன் ரமேஷ் உடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடும் சம்யுக்தா…!தீயாய் பரவும் டான்ஸ் வீடியோ!!!

0

தமிழ் சந்திரகுமாரி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் சம்யுக்தா கார்த்திக். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர்  நடிகர் ஜித்தன் ரமேஷ் உடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு  உள்ளார். அந்த விடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ காட்டுதீயாய்  பரவி வருகிறது.

விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் சம்யுக்தா. இவர் ஒரு மாடல் அழகியாகும். மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். இந்நிலையில் மிக பெரிய தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி  மகனும் ஜித்தன் பட புகழ் நடிகர் ஜித்தன்  ரமேஷ் உடன் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் போட்டிகளின் போட்டியாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு நடன போட்டி ஆகும். இந்த போட்டியில் பல்வேறு ஜோடிகள் இணைந்து களம் கண்டு வருகின்றனர். அந்த ஜோடிகளில் ஒரு ஜோடி தான் ரமேஷ் மற்றும் சம்யுக்தா. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட  வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here