மண்மணக்கும் ஆந்திரா ஸ்டைல் மட்டன் மசாலா – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

மட்டன் என்றாலே அது உடலுக்கு பல ஆரோக்கியத்தை தர கூடியது. மேலும் அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன் ஒரு விருந்தாகவே அமைகிறது. மேலும் உடலில் சூட்டை குறைக்கும் பெரும் அருமருந்தாக இந்த மட்டன் உள்ளது. தற்போது இந்த மட்டனை வைத்து சூப்பரான ஆந்திரா ஸ்டைல் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கி

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பட்டை , பிரியாணி இலை – சிறிது

ஏலக்காய்

கிராம்பு – 5

உப்பு

இஞ்சி – சிறிது

பச்சைமிளகாய் – 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் மட்டனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். இப்பொழுது குக்கரில் சிறிது பட்டை மற்றும் சீரகம் சேர்த்து மட்டனை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 4 விசில் வரும் வரை வைக்கவும்.

இப்பொழுது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டாய் கிராம்பு, பிரியாணி இலை வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது நன்கு சுருண்டு வந்ததும் சிறிது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

mutton curry
mutton curry

எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு மூடி வைக்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here