
தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகையாக, சமந்தா திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக தோல் சார்ந்த அலர்ஜி பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் இவர், அதற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட போது கூட தனது படத்திற்காக டப்பிங் பணிகளில் இவர் ஈடுபட்டிருந்த போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது அவர் தனது யசோதா பட ப்ரமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்தார். கவர்ச்சியை விட எனக்கு சண்டைக் காட்சிகளே மிகவும் பிடிக்கும், இதில் நடிப்பது தான் எனக்கு எளிதானது என தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இதைத்தான உங்க மாஜி கணவர் நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்பு கூறினார்.
அப்போது நீங்கள் அதை ஏற்க மறுத்து, கவர்ச்சி பக்கம் வண்டியை திருப்பினீங்க, இப்போ இப்படி சொல்றீங்க என கேள்வி எழுப்பி உள்ளனர். அதுபோக சமந்தா, அதை ஓபன் ஸ்டேட்மென்ட்டாக கொடுத்துள்ளதால், விரைவில் தனது கணவருடன் சேர வாய்ப்புள்ளதாக ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.