கிராமத்து ஸ்டைலில் சுவையான “ஆட்டுக்கறி குடல் குழம்பு”.., இதோ செய்முறை!!

0
கிராமத்து ஸ்டைலில் சுவையான
கிராமத்து ஸ்டைலில் சுவையான "ஆட்டுக்கறி குடல் குழம்பு".., இதோ செய்முறை!!

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த “ஆட்டுக்கறி குடல் குழம்பு”எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது ஆட்டுக்குடல் சாப்பிட்டால் நம் வயிற்றில் உண்டாகும் புண் சரியாகி விடும். இதுமட்டுமல்லாமல் செரிமான கோளாறுகளை சரி செய்யும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இத்தகைய நன்மைகள் தரக்கூடிய ஆட்டு குடலை வாரம்தோறும் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்
 • ஆட்டுக்கறி குடல் – 1/2 கிலோ
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • சின்ன வெங்காயம் – 14 (பொடியாக நறுக்கியது)
 • தக்காளி- 2
 • பட்டை – 1 துண்டு
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 3.
 • கிராம்பு – 2
 • சீரகம் – 1 ஸ்பூன்
 • சோம்பு, கசகசா -1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிது
 • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 • மல்லி தூள் – 1 ஸ்பூன்
 • துருவிய தேங்காய் – 1 கப்
 • கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஆட்டுக்குடலை, மஞ்சள் பொடி கலந்த சுடு தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இப்போது குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து குடலுடன் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். பின் 4 to 5 விசில் வந்ததும் அவற்றை இறக்கி வைத்து கொள்ள வேண்டும். இப்போது மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயதை போட்டு வதக்க வேண்டும். இதையடுத்து தக்காளி சேர்த்து வதக்கிய பின், இஞ்சி பூண்டு பேஸ்டை பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கிடையில் தேங்காய் துருவலுடன், சோம்பு, சீரகம், கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிளகாய் தூள், மல்லி தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதையடுத்து வேக வைத்த குடல் சேர்த்து மசாலா நன்றாக ஓட்டும் வரை கிளற வேண்டும். அதில் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி 10 முதல் 15 வரை கொதிக்க வைக்க வேண்டும். இதையடுத்து அடுப்பை அனைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் காரசாரமான “ஆட்டுக்கறி குடல் குழம்பு” ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here