ட்விட்டர் நிறுவனத்தில், யார் யாருக்கு அதிகாரப்பூர்வ கணக்கு வழங்கலாம் என்ற பட்டியலை, எலான் மாஸ்க் போட்டு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாக் தகவல் :
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, 3.62 லட்சம் கோடி கொடுத்து எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார். இவர் இந்த நிறுவனத்தை வாங்கியதும், ப்ளூடிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போருக்கு மாதந்தோறும் 8 டாலர் வசூலிக்கப்படும், என அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ப்ளூ டிக் பயனர்களுக்கான சரிபார்ப்பு தொடங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் இந்த, சேவை குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்றை மஸ்க் அறிவித்துள்ளார். அதாவது, இந்த அதிகாரப்பூர்வ கணக்கு எல்லோருக்கும் கிடைக்காது என்றும், குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் இப்போதைக்கு இதை வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்., உடனே அமல்படுத்த கோரிக்கை – ராஜஸ்தான் முதல்வர் அதிரடி!!
அதாவது அரசியல் தலைவர்கள், வணிக நிறுவனங்கள், முக்கிய வணிக கூட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொது நபர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரப்பூர்வ லேபிள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியிடப்படும் என, ட்விட்டர் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி எஸ்தர் கிராபோர்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.