தனது டயட் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா – வைரலாகும் வீடியோ!!

0
samantha
samantha

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் முன்னணி நடிகையான சமந்தா தற்போது தனது டயட் ரகசியத்தை கூறியுள்ளார்.

சமந்தா

தமிழில் மாஸ்கோவில் காவிரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் சமந்தா. அதற்கடுத்து முரளியின் மகன் அதர்வாவுடன் பானா காத்தாடி படத்தில் நடித்தார். அதன் பிறகு நானி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

samantha and naga saithanya
samantha and naga saithanya

தொடர்ந்து பல படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நிரந்தரமான இடத்தை பிடித்தவர் சமந்தா. 2017 இல் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்த சமந்தா தனது உடலை கட்டுக்குள் வைத்துள்ளார். இந்திய சினிமாவில் ஃ பிட்ட்டாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களுடன் தனது நேரத்தை செலவழித்து வந்தார் சமந்தா. அடிக்கடி தனது போட்டோ, வீடியோ என பகிர்ந்து வந்தார். தற்போது ட்விட்டரில் ஒருவர் சமந்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது எல்லா நேரங்களிலும் நீங்கள் இப்படி ஃ பிட்ட்டாக இருக்க கடைபிடிக்கும் உணவு பழக்கங்கள் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா “தான் அசைவ உணவுகளையும் பால் பொருட்களையும் சேர்த்துக்கொள்வதில்லை. அதிகளவு காய்களையே சாப்பிடுவேன். பச்சரிசி சாதம் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம்” என கூறியுள்ளார். மேலும் ஊரடங்கில் மன அழுத்தத்தை குறைக்க தியானத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here