நித்தியானந்தா பலே ஆளுயா நீ.., ஐநாவிற்கே விபூதி அடிக்க பார்த்துருக்கியேப்பா.. “கைலாசா”விற்கு இப்படி தான் அனுமதி கிடச்சுச்சா!!

0

ஐ நா சபை கூட்டத்தில் தலைப்பிற்கு பொருத்தம் இல்லாத கருத்துக்களை நித்தியானந்தா பிரதிநிதிகள் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கைலாசம்:

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் தான் சாமியார் நித்தியானந்தா. இவர் பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். தற்போது இந்தியாவை விட்டு தப்பி ஓடி சென்று தனக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டுள்ளார். இந்த நாட்டிற்கு பல பெண்களும் ஆண்களும் போட்டி போட்டு சென்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த நாட்டிற்கு செல்வதற்கு மக்கள் பாஸ்போர்ட் எப்படி எடுப்பது மற்றும் அந்த நாடு எங்கே இருக்கிறது குறித்து பலரும் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இதுநாள் வரை கைலாச குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நித்யானந்தா மீது ஏற்கனவே பாலியல் புகார்கள் இருந்து வரும் நிலையில் காவல்துறை மற்றும் மத்திய மாநில அரசு அவரைப் பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கைலாச நாட்டை சேர்ந்த நித்தியானந்தாவின் பிரநிதிகள்  ஐநா பொது சபையில் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

கிடப்பில் இருந்த படத்தை தூசி தட்டும் சுந்தர்.சி.., ஹீரோவாக நடிக்க போறது இந்த Flop ஹீரோவா?

அதாவது விஜய பிரியா என்ற இளம் பெண் பேசியதாவது, பகவான் நித்யானந்தா பரமசிவம் தனது தாய் நாட்டில் சில இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று நான் கூறினேன் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா கைலாசா இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது மற்றும் இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது. மேலும் பேசிய அவர் உரிமை குறித்தும், ஐநா சபை  கைலாச நாட்டை ஏற்றுக் கொண்டதாகவும்  விஜய பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வெளியாகின.


இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியது. மேலும் ஜெனிவாவில் நடந்த ஐ நா சபை  கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கின்றன. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நித்தியானந்தா கும்பல் கைலாசாவை ஐநா சபை  அங்கீகரித்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஐ நா சபையை சேர்ந்த அதிகாரி கூறுகையில், இந்தக் கூட்டத்தில் நித்தியானந்தா பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் அவர் கூறிய கருத்துக்கள் தலைப்பிற்கு பொருத்தம் இல்லாத கருத்துக்களாக இருந்தது. இதனால் அவர்கள் பேசிய அனைத்தையும் புறக்கணிக்கப்பட்டது விட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here