கிடப்பில் இருந்த படத்தை தூசி தட்டும் சுந்தர்.சி.., ஹீரோவாக நடிக்க போறது இந்த Flop ஹீரோவா?

0
கிடப்பில் இருந்த படத்தை தூசி தட்டும் சுந்தர்.சி.., ஹீரோவாக நடிக்க போறது இந்த Flop ஹீரோவா?
கிடப்பில் இருந்த படத்தை தூசி தட்டும் சுந்தர்.சி.., ஹீரோவாக நடிக்க போறது இந்த Flop ஹீரோவா?

இயக்குனர் சுந்தர்.சி படைப்பில் உருவான சங்கமித்ரா திரைப்படம் கிடப்பில் இருக்கும் நிலையில் மீண்டும் அந்த படத்தை இயக்க போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் என்று ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர் தான் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த காபி வித் காதல் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி படம் என்றால் காமெடியாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் வெளி வரும் படங்களை பார்த்து கிளிஞ்சாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் தமன்னா, ராசி கண்ணா வைத்து அரண்மனை 4 படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் இவர் இயக்கிய அரண்மனை பார்ட் 1 தான் மக்களை கவர்ந்தது. பின் வெளியான அரண்மனை 2 மற்றும் 3 படுதோல்வி அடைந்தது. இதனால் அரண்மனை பார்ட் 4 வைத்து ரசிகர்களை கவரமுடியாது என்று முடிவெடுத்த சுந்தர்,சி இந்த படத்துடன், கிடப்பில் இருந்த படத்தையும் சேர்த்து எடுக்க திட்ட போட்டுள்ளாராம். அதாவது நடிகர் ஜெயம் ரவியை வைத்து சங்கமித்ரா என்ற சரித்திர படத்தை சுந்தர்.சி இயக்கி வந்து கொண்டிருந்தார்.

இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ரத்து., முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு !!!

ஆனால் சில பல காரணத்தால் படம் பாதியில் நின்றது. தற்போது லைக்கா நிறுவனத்தின் உதவியால் மீண்டும் அந்த படத்தை எடுக்க போகிறாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக flap ஹீரோவை நடிக்க வைக்க இருக்கிறாராம். அதாவது சமீப காலமாக ஒரு படத்தில் கூட வெற்றி கொடுக்க முடியாமல் திணறி வரும் நடிகர் விஷாலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here