ரவுடி பேபி வீட்டில் நடைபெற்ற திருமணம்… பாசத்தில் உருகிய குடும்பத்தினர்!!!

0

சினிமா துறையில் ஒரு முக்கிய பிரபலமாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு நடைபெற்ற 85 வது திருமண விழாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இவர் திரையில் தோன்றிய தொடக்க காலத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் திரையில் தெரியும் கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமானார். அதாவது கஸ்தூரி மான் , தாம் தூம் போன்ற தமிழ் படங்களில் கூட்டத்தில் ஒரு ஆளாக திரை முன் தோன்றினார். என்ன தான் முதல் திரை அறிமுகம் தமிழ் என்றாலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த படம் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம் தான்.

ரைட்ல பார்த்த பியூட்டி… லெஃப்ட்ல பார்த்த நாட்டி… இளசுகளை பறக்க வைத்த ஷெரின்!!!

இந்த படத்தில் அவரின் மலர் டீச்சர் கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் புகழடைந்த ஒன்று. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்தார். தனுஷ் உடன் அவர் நடித்த மாரி 2 படம் படு ஹிட்டான ஒன்று. ஒரு துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் தனது விடா முயற்சியால் ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து உள்ளார்.

மேலும் இவர் ஒரு நன்கு பயிற்சி பெற்ற டான்சர் ஆவார். மேலும் அவருக்கு டான்ஸ்  மீதான காதலால் பல டிவி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய தாத்தா பாட்டியின் 85வது திருமண விழா நடைபெற்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here