ப்ளெயிங் 11 னில் DK தேவையில்லை?? சச்சினால் இந்திய அணிக்குள் ஏற்பட்ட குழப்பம்.., கடைசில இப்படி ஆயிடுச்சே!!

0
ப்ளெயிங் 11 னில் DK தேவையில்லை?? சச்சினால் இந்திய அணிக்குள் ஏற்பட்ட குழப்பம்.., கடைசில இப்படி ஆயிடுச்சே!!
ப்ளெயிங் 11 னில் DK தேவையில்லை?? சச்சினால் இந்திய அணிக்குள் ஏற்பட்ட குழப்பம்.., கடைசில இப்படி ஆயிடுச்சே!!

இந்திய அணிக்கான ப்ளெயிங் 11 னில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என முன்னாள் வீரர் சச்சின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ் கார்த்திக்

உலக கோப்பை தொடருக்கான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வரும் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனால் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இந்த ஆண்டு வேர்ல்ட் கப் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் ப்ளெயிங் 11 னை ரோகித் சர்மா அண்மையில் தெரிவித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ப்ளெயிங் 11 னில் சிறிய மாற்றத்தை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அவர் இந்திய அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் தான் அதிகமாக உள்ளனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கண்டிப்பாக ப்ளெயிங் 11 னில் இடம்பெற வேண்டும் என கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது அவர் ரிஷப் பண்டை களமிறக்க வேண்டும் என்று தான் மறைமுகமாக பேசியுள்ளார்.

4 ஓவரில் 6 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்திய தமிழக வீரர்…, இந்திய அணியில் இடம் பெறுவாரா??

ஏனென்றால் இந்திய அணியை பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் மட்டும் தான் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேனாக உள்ளார். ஒருவேளை அவரை களமிறங்கினால், தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார். ஆனால் ரிஷப் பண்ட் இதற்கு முன்னர் நடைபெற்ற எந்த போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் சச்சின் இதுபோன்று கூறியது இந்திய வீரர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here