ஜெயலலிதா மரணம்.,, எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் சசிகலா.,,எதையும் சந்திக்க தயார் என அறிக்கை!!

0
ஜெயலலிதா மரணம்.,, எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் சசிகலா.,,எதையும் சந்திக்க தயார் என அறிக்கை!!

ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விகே சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம்:

தமிழக சட்டசபையில் நேற்று ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் வாயிலாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, சசிகலா, சிவகுமார், அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் வெளிநாடு அழைத்துச் செல்ல சசிகலா தடையாக இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இது தொடர்பாக சசிகலா கூறியது, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவுகளை திட்டவட்டமாக நான் மறுக்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாதவர்கள், அவரது மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஜெயா இறப்பில் மர்மம்.,ஒரே திருக்குறளில் மொத்தத்தையும் சொன்ன விசாரணை ஆணையம்! பொதுமக்கள் ஷாக்!!

மேலும், அரசியலில் இருந்து ஓரம் கட்ட, என் மீது இப்படி பழி போடுகிறார்கள். ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் தலையிடவே இல்லை. அவருக்கு என்ன சிகிச்சை தர வேண்டும், என்ன மருந்து தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினர் மட்டுமே எடுத்தனர். ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க, நான் தடையாக இருந்தாக கூறியது முற்றிலும் பொய்யான தகவல்.மேலும், அறிக்கையில் என் மீது சொல்லப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் என்ன விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க, நான் துணிவுடன் இருக்கிறேன் என்று சசிகலா அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here