SA vs AUS 2023: இந்தியாவுடன் மோதப்போவது யார்? தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!

0
SA vs AUS 2023: இந்தியாவுடன் மோதப்போவது யார்? தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!
SA vs AUS 2023: இந்தியாவுடன் மோதப்போவது யார்? தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. லீக் போட்டியில் காயம்பட்ட ஆஸ்திரேலியா அணி, பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து மீண்டும் விளையாட இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதுவரை நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் 109 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா 55 முறை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 50 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், 4 போட்டிகள் மழையாலும் கைவிடப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இந்த இரு அணிகளும் மோத உள்ளது. இதில், வெல்லும் அணி உலக கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளி மாணவர்களே…, 10th, 11th மற்றும் 12th பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here