துணை பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி – மக்கள் அதிர்ச்சி!!

0
corona positive
corona positive

உலகின் முதல் தடுப்பூசியை வெளியிட்டு உள்ள ரஷ்யாவின் துணை பிரதமர் யூரி ட்ரூட்னெவ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனா தொற்று:

ரஷ்யாவில் இன்னும் 2 வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உலகின் முதல் தடுப்பூசியை வெளியிட்டு உள்ள ரஷ்யாவை பார்த்து உலக நாடுகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து உள்ளனர். இதனால் 20 நாடுகள் ரஷ்யாவிடம் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி ஆர்டர் செய்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய பிரதமர் மிகைல் தனது பயணங்களை ஒத்திவைத்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

முறையாக வரி கட்டுவோர்க்கு புதிய சலுகைகள் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

அவர் பயணத்திற்கு முன்பு, துணை பிரதமர் யூரி ட்ரூட்னெவ் கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். அதில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா 5,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை மொத்தமாக 902,701 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 15,231 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here