கொரோனாவிற்கான ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி 92% வெற்றி – ரஷ்யா அறிவிப்பு!!

0

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து உள்ள நிலையில், ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி மனித பரிசோதனையில் 92 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் கொரோனாவிற்கு முடிவு கட்டப்படும் என கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி:

உலகளவில் இதுவரை 51,902,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில் 1,281,161 பேர் உயிரிழந்த நிலையில், 36,452,587 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சமீப காலமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்தாலும், இன்னும் முழுவதும் கட்டுப்படவில்லை. கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, அதன் தொற்று குறையாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதுவரை முகக்கவசம், தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்தது. ‘ஸ்பூட்னிக் வி’ என பெயரிடப்பட்ட தடுப்பூசி 3ஆம் கட்ட மனித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவில் 92 சதவீத செயல்திறனை காட்டியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி 90% செயல்திறனை காட்டியதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here