பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணமா?? வெளியான தகவல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணமா’ தொடரின் நாயகியாக நடித்து வரும் நடிகை ரோஷினிக்கு திருமணம் ஆனது போல அவர் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

நடிகைக்கு திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலின் நாயகி ரோஷினி ஹரிப்ரியன். தனது நடிப்பாலும் தன்னுடைய நிறத்தாலும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் ரோஷினி. புதுமுக நடிகையான இவர் தொலைக்காட்சி தொடரில் அவர் ஏற்று நடித்து வரும் கதாபாத்திரத்துக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்து வருகிறது.

பிக் பாஸ் பிரபலம் தற்கொலை – ரசிகர்கள் ஷாக்!!

வழக்கமாக நடிகைகள் பதிவிடும் போட்டோ சூட் ஒன்றை இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் நெற்றி நிறைய குங்குமம் வைத்திருப்பது போல இருந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் கண்ணம்மாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிவந்தனர்.

இந்நிலையில் அது வெறும் போட்டோ சூட் தான். இப்போதைக்கு திருமணம் இல்லை அது போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here