அம்மன் கெட்டப்பில் பண்ற வேலையா இது?? ரோஜா சீரியல் நடிகைகளின் ரகளை வீடியோ!!!

0

சன் டிவியின் TRP யில்  எப்பொழுதும் டாப்பில் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்கார் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் புட்ட பொம்மா பாடலுக்கு அந்த சீரியலின் நடிகைள் குத்தாட்டம் போட்டு உள்ளனர்.

செண்பகத்தின் மகள் அணு யார் என்பதையும், அதை அறிய நடைபெறும் சுவாரசியங்களை, சூழ்ச்சிகளை  மையமாக கொண்டு ரோஜா சீரியல் கதை ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட  எபிசோடுகளை கடந்து தற்போது வரை மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் வடிவுக்கரசி போன்ற வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் நுணுக்கமான காட்சியமைப்பு, இளசுகளை கவரும் ரொமான்ஸ் சீன்கள், அவ்வப்போது வரும் காமெடி காட்சிகள் என விறுவிறுப்புக்கும் பரபரப்பிருக்கும் பஞ்சமில்லாமல் மக்கள் மத்தியில் வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் தற்போதைய கதையாக உண்மையான அணுவான ரோஜா நான் தான் செண்பகத்தின் உண்மையான மகள் என்பதை நிரூபிக்க தெய்வத்தின் முன்னிலையில் தீச்சட்டி எடுத்து போராடுகிறார்.

இந்நிலையில் இவர்கள் பயபக்தியுடன் மஞ்சள் நிற சேலையில் இருந்துகொண்டு ஷூட்டிங் இல்லாத நேரத்தில் புட்ட பொம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடிய வீடியோவை சீரியல் நாயகி ரோஜா என்ற பிரியங்கா நல்கார் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சிலர் அம்மன் உருவில் இருந்து கொண்டு பாக்குற வேலையா இது ? என்பது போல நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here