கர்ப்பமாக இருக்கும் ஜெனி… கோபத்தில் கொந்தளிக்கும் செழியன்… நடக்க இருக்கும் அடுத்த விபரீதம்!!!

0

விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் டாப் 5ல் இருக்கும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. இந்நிலையில் இந்த சீரியலில் இன்று, ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இதனால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என எண்ணி கடும் கோபத்தில் இருக்கிறார் செழியன்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் நடவடிக்கைகள் மீது சந்தேகப்படும் செல்வி பாக்கியாவிடம் ஜெனி கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதை ஏற்காத மாறி செல்வியிடம் பேசினாலும் பாக்கியா தன் மனதில் குழப்பத்துடன் இருக்கிறார். குழந்தையை கலைக்க சொன்னதால் மிகுந்த வருத்தத்தில் செழியனிடம் பேசிக்கொண்டிருக்கிறார் ஜெனி. எனினும் செழியன் தான் சொன்னதில் உறுதியாக இருக்கிறார்.

அந்த நேரத்தில்  ஜெனியின் வாந்தி நிற்பதற்காக பாக்கியா கசாயம் கொண்டு வந்து தருகிறார். இந்நிலையில் இன்றைய கதையில், ஜெனியை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு கீழே கிளம்புகிறார் பாக்கியா. இதையடுத்து பாக்கியா மற்றும் செல்வி, ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். அப்பொழுது அவர் வீட்டின் மேசையில் கோபி வாங்கி கொடுத்த புடவை இருப்பதை பாக்கியா மற்றும் செல்வி பார்க்கின்றனர்.

அதன் பின்னர் இருவரும் தங்களுக்குள் அதை பற்றி பேசிக்கொண்டு ராதிகாவிடமும் கேட்கின்றனர். இதையடுத்து விலையை விசாரிக்கின்றனர். விலையை கேட்டு பாக்கியா  மற்றும் செல்வி ஆசிரியப்பட்டு தன்னுடைய புடவையும் அதே விலை தான் என கூறி புடவையின் புகைப்படத்தை காட்டுகிறார் பாக்கியா. அதன் பின்னர் ராதிகா தான் இதே மாதிரி புடவையை தான் நான் கடையில் எடுத்தேன்.

ஆனால் வீட்டிற்கு வந்ததும் என் புடவை மாறி விட்டதாக கூறுகிறார்.  இவ்வாறு பேசிக்கொண்டே பாக்கியா மற்றும் செல்வி கிளம்புகின்றனர். இதையடுத்து வெளியே வரும் செல்வி, பாக்கியாவிடம், சார் கூட வந்தது ராதிகாவாக கூட இருக்கலாம் என கூறுகிறார். அதற்கு பாக்கியா செல்வியை கடுமையாக திட்டுகிறார். அதன் பின்னர் இருவரும் பைக்கில் ஏறி வீட்டிற்கு செல்கின்றனர்.

இந்நிலையில் வீட்டிற்கு வரும் பாக்கியா செழியனிடம் ஜெனியை ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போகுமாறு கூறுகிறார். அப்பொழுது ஜெனி அழுகிறார் இதனை பார்த்த பாக்கியா இருவர் மீதும் சந்தேகப்படுகிறார். அதன் பின்னர் பாக்கியா ஜெனியிடம் துருவி துருவி கேட்கிறார். ஜெனி உண்மையை சொல்ல வரும் வேளையில் அவரை செழியன் மிரட்டுகிறார். அதன் பின்னர் அழுதுகொண்டே ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார்.

அதை கேட்ட பாக்கியா சந்தோஷத்தில் அவரை கீழே அழைத்து சென்று ஜெனி குழந்தை உண்டாகி இருப்பதை தாத்தா மற்றும் பாட்டியிடம் கூறுகிறார். அதை கேட்டு ஆனந்தத்தில் ஜெனிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்கின்றனர்  தாத்தா மற்றும் பாட்டி. இந்நிலையில் அங்கு கடும் கோபத்துடன் செழியன் கீழே வருகிறார். அப்பொழுது அவரையும்  அழைத்து தாத்தா மற்றும் பாட்டி வாழ்த்துக்கள் கூறுகின்றனர்.

அதன் பின்னர் இதை ஏன் சொல்லவில்லை என கேட்டதற்கு டாக்டர் கிட்ட போய் உறுதி படுத்தி விட்டு சொல்லாம் என்று இருந்ததாக கூறுகிறார் செழியன். அதன் பின்னர் பாட்டி ஜெனியை டாக்டரிடம் அழைத்து செல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இது பிடிக்காத செழியன் ஜெனியின் மீது கோபத்துடன் ரூமுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய கதை நிறைவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here