இந்திய அணியின் கேப்டனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்? – விரைவில் வெளியாகும் அறிவிப்பு: ஆனந்தத்தில் ரசிகர்கள்!

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலிக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட இருப்பதாக உள்ள தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டனாகும் ரோஹித்:

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி  தொடங்கி நடைபெற்ற இருக்கிறது.  இந்த போட்டிகள் நவம்பர் 14ம் தேதி முடியவுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

மேலும், இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய  கிரிக்கெட் அணி அதிரடியாக களமிறங்க உள்ளது.  இதில் குறிப்பிடத் தகுந்த வகையில், அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்த டி 20 உலக கோப்பை போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் கேப்டனாக வேறு ஒருவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி மாற்றப்பட்டு அணியின் சக வீரரான ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பை முறையாக அணியின் தற்போதைய கேப்டன் கோலி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு பிறகு, கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கேப்டன் மாற்றம் ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here