ரோஜா சீரியல் பிரபலத்தின் புது ப்ராஜெக்ட்  இதுதான்! இனி இதோட டிஆர்பி எங்கேயோ போகப் போகுது!!

0
ரோஜா சீரியல் பிரபலத்தின் புது ப்ராஜெக்ட்  இதுதான்! இனி இதோட டிஆர்பி எங்கேயோ போகப் போகுது!!

ரோஜா சீரியலில் முக்கிய ரோலில்  நடித்து வந்த பிரபலம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் கமிட் ஆகியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட்:

சன் டிவியில் மிக நீண்ட நாட்கள் ஒளிபரப்பான தொடர், என்ற பெருமையை பெற்றிருந்த ரோஜா சீரியல் கடந்தாண்டு முடிக்கப்பட்டது. தற்போது இந்த சீரியலுக்கு பதிலாக ஆலியா மானசா நடித்து வரும் இனியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரோஜா தொடரில், அன்னபூரணி பாட்டி என்ற கேரக்டரில், வெளுத்து வாங்கியவர் நடிகை வடிவுக்கரசி.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், இந்த சீரியலில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் கமிட் ஆகியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

தொடங்கிய கொஞ்ச நாளிலேயே நல்ல டிஆர்பி பெற்று வரும் இந்த தொடரில், இவர் நடிக்க உள்ளதால், இனி இந்த சீரியலின் டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சீரியலில் இவர் ஸ்பெஷல் என்ட்ரியா? இல்லை தொடர்ந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here