வாவ்.,நம்ம மீனாவா இது? உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல! ஒரே பதிவில் எல்லாம் கிளோஸ்!!

0
வாவ்.,நம்ம மீனாவா இது? உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல! ஒரே பதிவில் எல்லாம் கிளோஸ்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் தன் கணவரை இழந்த நடிகை மீனா, தன் இன்ஸ்டா பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீனா பதிவு:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், பார்த்திபன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை மீனா. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கணவர் வித்யாசாகர், நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கணவனை இழந்த மீனா, அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் வீட்டோடு முடங்கினார். அதன் பிறகு மீனாவின் திரையுலக நண்பர்களான கலா மாஸ்டர் உள்ளிட்டோர் இவரை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய மீனா, தற்போது ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது படு மாடர்ன் லுக்கில், வித்தியாசமான உடை அணிந்து தன் இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள், அடேங்கப்பா ஒரு வருஷத்துக்குள்ள இவ்வளவு பெரிய மாற்றமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here