“தாயை போல பிள்ளை” – அட நம்ம ரோஜாவோட பொண்ணா இது; என்னமா வளந்துட்டாங்க!!!

0

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில்; நடிகர் பிரசாந்த்துக்கு ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ரோஜா. இப்போது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை; தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அச்சு அசல் நடிகை ரோஜாவை போல் உள்ள அவரது மகள்:

நடிகை ரோஜா செல்வமணி தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அதன் பிறகு அவர் அரசியலில் நுழைந்து வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் ஆனார். மறுபுறம், ஜபர்தாஸ்ட் காமெடி ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதனையடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். இப்போது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை; அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நடிகை ரோஜாவின் மகள் அவரைப் போலவே இருப்பதாக; ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here