இந்தியாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை – இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்!!

0

நாடு முழுவதும் மக்கள் இணையத்தின் சேவையை நாடியுள்ளனர். நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்கள் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்தியாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளம்:

நாடு முழுவதும் மக்கள் இணையத்தை சரளமாக உபயோகிக்க துவங்கியுள்ளனர். தங்களுக்கு தேவையான அனைத்தும் இணையத்தில் கிடைப்பதால் மக்கள் இதனை அதிகமாக நாடுகின்றனர். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை செலவு செய்கின்றனர். உணவு இல்லாமல் கூட இருப்பார்கள் அனால் சமுக வலைதளம் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமூக வலைத்தளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். வாட்சப் மூலம் கருத்துக்களை பரிமாறுகின்றனர். தற்போது சமுக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. தற்போதய நிலவரப்படி ட்விட்டர் – 1.75 கோடி மக்களும் ,வாட்சப் – 53 கோடி மக்களும், இன்ஸ்டாகிராம் -21 கோடி மக்களும், ஃபேஸ்புக் -41 கோடி மக்களும், யூடியூப் – 44.8 கோடி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here