டி20 கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர்தான் என டாம் மூடி ரசிகர்களுக்கு ட்வீட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
டாம் மூடி..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான டாம் மூடி 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்ட போது இது கடினமான கேள்வி ஆனால் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் இந்தியாவின் ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன் என்று ட்வீட்டர் வாயிலாக ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் பிடித்தமான கேப்டன் டோனி என்று மற்றொரு கேள்விக்கு பதிலை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட்டில் மனம் கவர்ந்த வீரர் விராட் கோலி பிடித்தமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் கூறினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |