ஹீரோயினாக களமிறங்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னர்… ஹீரோ யாருன்னு தெரியுமா???

0

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியாக  அறியப்படுவது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மக்களால்  அறியப்படும் பிரபலங்களாக உள்ளன. இருப்பினும் அதில் சிலர் மட்டுமே  தங்களின் நிலையை சினிமா துறையில் உயர்த்தி கொண்டனர். அந்த வகையில் பிக்பாஸ் டைட்டில் வின்னரான ரித்விகாவும் ஒருவர். தற்போது இவர் காமெடி நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கு  ஜோடியாக ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா  அவர்களின் இயக்கத்தில் உருவான பரதேசி  படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதை தொடர்ந்து  ‘மெட்ராஸ் ‘ , ‘நினைத்தது யாரோ’  உட்பட சில படங்களில் நடித்துள்ளார் . இருப்பினும் மெட்ராஸ் படத்தில் இவரின் சிறந்த நடிப்பால் ஒரு முன்னணி நடிகையை உயர்ந்தார். பெரும்பாலும் இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலையே நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் – 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் சிறப்பாக விளையாடி ,மக்களின் பேராதரவோடு அதற்கான டைட்டிலை வென்றார் .

 

பிக் பாஸ் டைட்டில் வென்ற பின் , ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிட்டவில்லை. இருப்பினும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் வாய்ப்பு கிடைக்கத்தான் செய்தது. இந்நிலையில் தான்  பிரபல காமெடி நடிகரான காளி வெங்கட்டுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் காளி வெங்கட் பல படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர்  ‘ராஜா மந்திரி’ படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.  தற்போது இரண்டாவது தடவையாக அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தான்  ஹீரோயினாக ரித்விகா ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரம்மா என்பவர் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு கொரோனா  இரண்டாம் அலை பரவல் முடிவடைந்த பின்னர் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here