பிக் பாஸ் பிரபலங்கள் ரியோ மற்றும் சோம் செய்த காரியம் …கடுப்பான சுருதி…! அப்படி என்ன செஞ்சாங்கணு நீங்களே பாருங்க!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சோம் சேகர். இவரும் விஜய் டிவியின் செல்ல பிள்ளையுமான ரியோ, அவர்கள் இருவரும் பிக் பாஸ் மூலம் நெருங்கிய நண்பர்களாக மாறியவர்கள். இந்நிலையில் சமீபத்தில் சோம் ரியோவின் வீட்டிற்கு சென்று வீடியோ கேம் விளையாடி உள்ளார். இதை கண்டு கடுப்பான ரியோவின் மனைவி சுருதி அந்த  விடீயோவை பதிவிட்டு ‘Hijacking my TV time’ என குறிப்பிட்டு உள்ளார். அதற்கு சோமும்  தகுந்ததொரு  பதிலை அளித்து உள்ளார்.

 

சோம் சேகர் பல விளம்பர படங்கள் ,குறும்படங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு குத்துச்சண்டை வீரரும் ஆவார். இந்நிலையில் இவரின் முகம் மக்களுக்கு பரிச்சயமாக காரணம் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்-4 மூலம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அதன்  மூலம் நண்பர்கள் கூட்டம் மற்றும் ரசிகர்கள் சேர்த்தார். இந்நிலையில் ஒரு தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய ரியோ பின்பு மெல்ல மெல்ல முதலில் சீரியல் முன்பு திரைப்படம் என தனது நிலையை உயர்த்தினார்.

ரியோ மற்றும் சோம் இருவரும் அந்த பிக் பாஸ் சீசன் -4 மூலம் நெருங்கிய நண்பர்கள் ஆகினர் . இந்நிலையில் சோம் அவ்வப்போது தனது பிக் பாஸ் போட்டியாளர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் அவர் தனது நேரத்தை அவர்களுடன் கழிக்கிறார் என்பது தெரிகிறது. அந்த வகையில் சமீபத்தில் தனது நண்பர் ரியோ வீட்டிற்கு சென்று உள்ளார் சோம்.

அங்கு இருவரும் சேர்ந்து வீடியோ கேம் விளையாடி உள்ளனர். இதை ரியோவின் மனைவி சுருதி வீடியோவாக  பதிவு செய்து அதை இணையத்தில் பதிவேற்றி அதற்கு கேப்சனாக Hijacking my TV time என குறிப்பிட்டு உள்ளார். அதாவது “எனது தொலைக்காட்சி நேரத்தை கடத்தி விட்டார் சோம்” என்பதே அந்த பதிவின் அர்த்தம் ஆகும். அதற்கு பதிலாக  சோம் மன்னிப்பு கேட்கும் விதமாக “ஹாஹா மன்னிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இவர்களின் கமெண்டுகள் ரசிகர்களை ஈர்த்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here