தமிழக மக்கள் கவனத்திற்கு.., அரிசியின் விலை கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா.., வெளியான தகவல் !!!

0
தமிழக மக்கள் கவனத்திற்கு.., அரிசியின் விலை கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா.., வெளியான தகவல் !!!
தமிழக மக்கள் கவனத்திற்கு.., அரிசியின் விலை கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா.., வெளியான தகவல் !!!

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தான் தமிழகம் மற்றும் வெளி நாடுகளுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்ததாலும், வெளிநாடுகளுக்கு அதிகமாக நெல் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் தமிழகத்திற்கு வரும் நெல் வரத்து குறைந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் காரணமாக தமிழகத்தில் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரையும், மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில், தமிழகத்தில் அரிசி ஆலைகளுக்கு நெல் வரத்து குறைந்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களே., இன்று முதல் இந்த பொருட்களை தடையின்றி பெறலாம்? வெளியான அறிவிப்பு!!!

இதனால் தான் அரிசியின் விலையை உயர்த்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திடீர் விலை உயர்வு அடுத்த அறுவடை வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரிசியின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here