
தமிழகம் முழுவதும் 3225 பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) முதல் தொடங்க உள்ளது. அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மேல்நிலை பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசி தேர்வர்கள் என 16,39,367 பேர் தேர்வெழுத உள்ளார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து கடந்த சில நாட்களாக தேர்வு மையங்களில் தேர்வு பணி ஆசிரியர்களின் செல்போனுக்கு தடை , மாணவர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை வெளியிட்டு வருகிறது. இதனால் முன்னதாக 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் இதுபோன்ற அறிவுரைகள் அச்சிடப்படவில்லை.
எனவே தற்போது திருத்தப்பட்ட அறிவுரைகளுடன் https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேல்நிலை பொதுத்தேர்வு மாணவர்கள் இந்த ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தேர்வுத்துறை வலியுறுத்தியுள்ளது.