
தமிழகத்தில் ஆண்டுதோறும் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளை தேடி அலைந்து வருகின்றனர். எனவே வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தனியார் வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களின் வருகையை அதிகரிக்க ரூ.30,000 கோடி மதிப்பில் ஒப்பந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதன்படி விரைவில் மிட்சுபிஷி, மகிந்திரா உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்திற்கு ரூ.5769 கோடி நிதி ஒதுக்கீடு., அப்போ, இனி வளர்ச்சி திட்டம் குவிய போறது கன்பார்ம்!!
இதன்மூலம் வேலை இல்லாமல் தவித்து வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். எனவே இதற்கான ஒப்புதல் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.