குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!!

0

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் வங்கிகளில் வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி பற்றிய தகவலை அறிவித்துள்ளார். இத்துடன் வேறு சில தகவல்களையும் அவர் தெரிவிதித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி:

வங்கிகளின் தலைமையாக செயல்படும் ரிசர்வ் வங்கி பயனாளர்களுக்கு ஏற்றவாறு பல கடன் திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றனர். தொழில் துவங்குபவர்களுக்கான லோன், கல்வி கடன் என பல வகையில் மக்களுக்காக கடன் வழங்கி மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். மேலும் இதுவரை குறுகிய கால கடன் வாங்கியவர்களுக்கு வட்டியாக 4 சதவீதம் விதித்திருந்தனர். தற்போது இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி கந்த தாஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சக்தி காந்த தாஸ்:

அதன் படி இதுவரை குறுகிய கால கடனுக்கு வட்டியாக 4 சதவீதம் விதிக்கப்பட்டது. தற்போது அதில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து 4 சதவீதம் வட்டி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவில் இருந்து தற்போது நாம் மீண்டுள்ளதால் தொழில் துறைக்கு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை நிலவரம் – 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!!

அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை பயனாளர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு கடன் திட்டங்களை நடைமுறைபடுத்தி வந்தது. தற்போது வரும் காலங்களிலும் தொழில்துறை பயனாளர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் கடன் பெரும் சூழலை ரிசர்வ் வாங்கி தொடர்ந்து ஏற்படுத்தி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here