விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!!

0

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தில் தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஜெயலலிதா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை தனியாக பிரித்து, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை நிலவரம் – 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!!

விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் துவங்கப்படவுள்ளது. புதிய பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை வைக்க இன்று தமிழக சட்ட பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆளுநர் உரை

விழுப்புரத்தில் அமைக்கப்படும் இந்த புதிய பல்கலைக்கழகம் மற்ற கல்லூரி நிர்வாகத்திற்கு பயன்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சமூகத்தின் தலைவரான ஏ. கோவிந்தசாமியின் பெயரிட வேண்டும் என முன்பே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து நடக்கப்படவுள்ள பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமி உரையாற்றவுள்ளார். அதன் பிறகு முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இதன் பின்பாக தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here