தொடர்ந்து சரிந்து வரும் தங்க விலை – நகை வாங்க குவியும் மக்கள்!!

0

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அபார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் நகை பிரியர்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம்:

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அபார வீழ்ச்சியை சந்தித்து வந்தது. மேலும் கடந்த கொரோனா காலங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்கத்தின் விலை சரிவால் சுபநிகழ்ச்சிகள் நடத்த காத்திருந்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அனைவரும் நகை வாங்குவதற்கு சரியான காலம் இது தான் என்றே சொல்லலாம். தங்கத்தின் தொடர் விலை மாற்றத்தால் நகையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.336 குறைந்துள்ளது. இதன்மூலம் தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.35,528 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.42 குறைந்துள்ளது.

தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை நிலவரம் – 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!!

இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,441 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து தற்போது ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.72,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here