உலக அளவில் சிறந்த பிராண்டுகள் – ரிலையன்ஸ் 2வது இடம்!!

0

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2ம் இடம்..!

இந்திய நெட்வொர்க் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் களமிறங்கிய மூன்றே ஆண்டுகளில் முதலிடத்தைத் தனதாக்கியது. இதுமட்டுமல்லாமல், தற்போது கொரோனா பாதிப்புகள் நிலவும் சூழலிலும் சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை முகேஷ் அம்பானி திரட்டி வருகிறார். ஜியோ மீட் என்ற புதிய வீடியோ கான்பெரன்ஸ் செயலி ஒன்றையும் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, சர்வதேச அளவில் அதிக மதிப்பு மிக்க பிராண்டுகளுக்கான பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஃபியூச்சர் பிராண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேசப் பட்டியலில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், புதிய கண்டுபிடிப்பு, வளர்ச்சி, சிறந்த வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முன்னிலை வகிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mukesh ambani
mukesh ambani

கொரோனாவிற்கு புதிய மருந்து அறிமுகம் – 49 ரூபாயில்!!

ஆப்பிள், ரிலையன்ஸ் பிராண்டுகளைத் தொடர்ந்து, சாம்சங் மூன்றாம் இடத்திலும், விடியா நான்காம் இடத்திலும், மௌடாய் ஐந்தாம் இடத்திலும், நைக் ஆறாம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் ஏழாம் இடத்திலும், ஏ.எஸ்.எம்.எல். எட்டாம் இடத்திலும், பேபால் ஒன்பதாம் இடத்திலும், நெட்ஃபிளிக்ஸ் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here