பேஸ்புக், ட்விட்டர் வீடியோக்களுக்கு தணிக்கை – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
chennai high court ordered social media
chennai high court ordered social media

சமூக வலைதளங்கள் ஆன பேஸ்பூக், யூடுப், ட்விட்டர்களில் மக்கள் சில தவறான ஆபாசமான விடீயோக்களை பதிவு செய்து வருகின்றனர், இதனால் இளைய சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுவதால் அப்படி பதிவேற்றப்படும் வீடியோவை தணிக்கை செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக் கோரியும் அதற்க்கு பதிலை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சமூக வலைத்தளங்களுக்கு பதிவுக்கு தணிக்கை

கே.சுதன் சென்னை வழக்கறிஞர் ஆவார். இவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அதில் கொரோன ஊரடங்கு இருப்பதால் மக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் வெளியில் செல்லாமலும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் திறக்காத நிலையில் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர் மற்றும் வேளைக்கு அலுவலகம் செல்லாதவர்கள் வீட்டில் இருந்த வண்ணம் ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகின்றனர் இதனால் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

high court ordered social media

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் – ரஷ்யாவிற்கு WHO எச்சரிக்கை!!

அதுமட்டுமில்லாமல் சிறுவர்களிருந்து பெரியவர்கள் முதல் அனைவரும் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இன்று பலரும் சொந்தமாக யுடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில் அவர்கள் சில ஆபாச விடீயோக்களை குறும்படமாக பதிவேற்றம் செய்கின்றனர். மற்றும் பேஸ்புக்,டுவிட்டர் பயன் படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ட்விட்டர் வலைதளத்தில் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் ஆபாசமாக அவதூறாகவும் பேசி வருகின்றனர், நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது திருமணம் பற்றி தேவையில்லாத பேச்சுக்கள் மற்றும் மோதல் ஒருவொருக்கொருவர் மாரி மாரி அசிங்கமாக திட்டிக்கொள்வது என விடீயோக்களை பதிவேற்றம் செய்தனர் அதை அதிக அளவில் மக்கள் பார்த்து வருகின்றனர்.

high court ordered social media

தணிக்கையின்றி வீடியோ புகைப்படம் தகவல்களை பதிவேற்றம்செய்வதால் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். பின் முருகன் வெளிப்பட்டன கந்த சஷ்டி பற்றியும் மற்றும் தேச தலைவர்கள் பற்றியும் அவதூறாகவும் பேசி சித்தரித்து வருகின்றனர். விளம்பரம் என்னும் பெயரில் தவறான விடீயோக்களை வருவது அதை பள்ளி மாணவர்கள் அறியாமல் பார்ப்பது பணத்திற்காக இப்படி விளம்பரம் பதிவேற்றி அனைவர்க்கும் செல்லும் வண்ணம் செய்வது இப்படிப்பட்ட செயல்களினால் இளைய சமுதாயமும் பள்ளி சிறுவர்களின் எதிர்காலம் வீணாகும், திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது போல் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாசமனவை தவறானவை தேவையில்லாத விடீயோக்கள் போட்டோக்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்வதை தடுக்க தணிக்கை செய்ய வாரியம் அல்லது ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என தணிக்கை குழு அமைக்க வேண்டும் என இளைஞர்கள் மாணவர்களின் நலன் கருதி சுதன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு எம்.எம்.சுந்தரேஷ் ஹேமலதா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here