குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஎன்பிஎஸ்சி வெளியீடு!!

0
tnpsc group 2 exams latest announcement
tnpsc group 2 exams latest announcement

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டவர்கள் மார்ச் மாதம் 15ம் தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்ற வேண்டுமென TNPSC அறிவித்துள்ளது.

சான்றிதழ் பதிவேற்றம்:

தமிழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1ல் வெற்றி பெற்று முதன்மை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதிக்குள் அரசு வேலை நாட்களில் மட்டும் [மாலை 5.45க்கு முன்னர்] தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையத்தளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென TNPSC அறிவித்துள்ளது.

tnpsc 2020 group 1

முன்னாள் ஐஏஎஸ் சகாயம் முதல்வர் வேட்பாளரா?? ஆன்லைன் சர்வே!!

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதர் எண்ணை ONE TIME REGISTRATION ல் இணைத்தால் மட்டுமே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும். முதல்நிலை தேர்வில் விண்ணப்பக் கட்டணத்தில் சலுகையோ, விலக்கோ கோராதவர்கள் கண்டிப்பாக மார்ச் 15க்குள் தங்களது முதன்மை தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமான ரூ.200ஐ TNPSC இணையதள குறிப்பாணையில் கூறியுள்ளபடி செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து அந்த அறிவிப்பில் “விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றாத விண்ணப்பதார்கள், முதன்மை தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கருதப்பட்டு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனையிலிருந்து விலக்கப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here