திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!

0

தமிழ்நாட்டில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன், திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தற்போது சேலத்தில் துவக்கி வைத்துள்ளார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்:

தமிழக அரசின் சில வரைமுறையின் கீழ் ஏழை பெண்களின் திருமணத்திற்காக அரசு சார்பில் 25,000 ரூபாய் பணம் காசோலை வடிவத்திலும், 4 கிராம் மதிப்புள்ள தங்ககாசு திருமாங்கல்யத்திற்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு 50,000 ரூபாய் பணம் காசோலை வடிவத்திலும், 4 கிராம் தங்ககாசு திருமாங்கல்யத்திற்காகவும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வரின் இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் விரைவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தற்போதுள்ள நிதியாண்டில் இந்த திட்டத்திற்காக 7,100 பயனாளிகளுக்கு 56 கோடி 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, சேலத்தில் 35 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி துவக்கி வைத்துள்ளார், தமிழக முதல்வர் பழனிசாமி. தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆன்லைன் விற்பனைக்காக ‘சேலம் மதி’ என்ற புதிய செயலியையும் துவங்கி வைத்துள்ளார் முதல்வர். இதன்படி இந்த செயலி மூலம் சுமார் 2000 பொருட்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here