அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மறுதேர்வு – அமைச்சர் பொன்முடி அதிரடி!!

0

பொறியியல் கல்வி படிக்கும் மாணாக்கர்கள் எழுதிய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டு தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் தற்போது கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை முறையாக நடத்த பல்வேறு கட்ட இன்னல்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு மற்றும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 2020ம் ஆண்டிற்கான பருவத்தேர்வு நடத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஒழுங்கு நிகழ்நிலை தேர்வாக 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் அதிக முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இதனால் தாங்கள் அதிக சிரமங்களை சந்தித்ததாகவும் மாணாக்கர்கள் குற்றம் சாட்டினர். தற்போது இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் – சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடக்கம்!!

College
College

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த ஆலோசனையின் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் மறுதேர்வு நடத்தப்படும். இதற்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் பிப்ரவரி மாத தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரும்பினால் இதிலும் பங்கேற்கலாம். பல்கலைக்கழகம் முன்பு பின்பற்றிய வினாத்தாள் முறையை பின்பற்றலாம் என்றும் தேர்வு 3 மணி நேரம் நடதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் மற்றும் மே மாத பருவ தேர்வும் மேற்கண்ட முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here