கங்கை நதியில் 150 சடலங்கள் மிதப்பு – கொரோனவால் உயிரிழந்தவர்களா??

0
Bihar, May 10 (ANI): Dead bodies of Covid-19 floating on the bank of the Ganga river, in Buxar Monday on Monday. (ANI Photo)

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்பரவல் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிக கடுமையான வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களை மேலும் வேதனை அடைய செய்யும் வகையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கங்கை நதி:

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரையும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வீட்டிலே மிக பாதுகாப்பாக இருக்கும்படியும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை புதைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காரணம் அவர்களை புதைக்க மயானத்திற்கு அருகேயுள்ள பொதுமக்கள் அதற்கு அனுமதி அளிப்பது இல்லை. இதனால் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் அதிர்ச்சி அடையும் வகையில் கங்கை நதியில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீஹார் மாநிலத்தில் புனிதமான நதியாக காணப்படுவது தான் கங்கை நதி.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் – சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடக்கம்!!

தற்போது இந்த நதியில் 150க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் நதியில் வீசிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அனைவரையும் உலுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here