இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB… சென்னை, மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!

0
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB

கடந்த வருடத்தில் இருந்தே விளையாட்டு வீரர்களில் தொடங்கி அணிகள் வரை சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். மேலும் அவர்கள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவதை விட இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் செயல்படுவது அதிகமாக உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் வலைத்தளம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த நவம்பர் மாதத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு அணிகளில் 164  மில்லியன் இம்ப்ரஸன்களைப் பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தில் உள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட சென்னை மும்பையை பின்னுக்கு தள்ளி பெங்களூர் அணி முதல் இடத்தை பிடித்து இருப்பது சிறப்பிற்குரியது. நவம்பரில், இன்ஸ்டாகிராமில் ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு அணிகளை கீழ் காணலாம்.

நவம்பரில் இன்ஸ்டாகிராமில் ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு அணிகள்:

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 164 மில்லியன்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 104 மில்லியன்
  • மும்பை இந்தியன்ஸ் – 60.8 மில்லியன்
  • அல்-நாசர் எஃப்சி – 20.7 மில்லியன்
  • குஜராத் டைட்டன்ஸ் – 46.1 மில்லியன்

Enewz Tamil WhatsApp Channel 

“முளைச்சு 3 இலை விடல” உனக்கு காதல் கேக்குதா?? தர்ஷினியை கேவலமாக பேசிய குணசேகரன்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here