கடன் தவணை செலுத்த கால அவகாசம் – ஆர்.பி.ஐ.,யின் சுற்றறிக்கை எப்போது அமல்?

0

இந்தியாவில் கொரோன நோய்பரவல் காரணமாக வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வரும் மக்களுக்கு பயனடையும் வகையில் ஆர்.பி.ஐ கடன் தவணையை செலுத்த கால அவகாசம் அளிக்குமாறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

கால அவகாசம்:

கடந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணத்தினால் இந்தியாவில் பல தரப்பு மக்கள் வேலையை இழந்து வருமானம் இன்றி இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு ஆர்.பி.ஐ ,கடந்த ஆண்டு வங்கிகளில் செலுத்த வேண்டிய கடன் தவணைக்கு 6 மாத காலம் அவகாசத்தை வழங்கியது. இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆறுதலை கொடுத்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது. இதனால் மீண்டும் பலர் வேலையை இழந்து தவிக்கின்றனர். மேலும் சில நிறுவனங்கள் சம்பளபிடித்தமும் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் மீண்டும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ கடன் தவணையை செலுத்த கால அவகாசம் அளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

போலீசாரிடம் பாம்பை ஆவணமாக காட்டிய வாலிபர் – கர்நாடகாவில் நடந்த வினோத சம்பவம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது, கடன் தவணையை செலுத்த அதிகபட்சமாக 2 ஆண்டு காலம் வரை அவகாசம் வழங்க ஆர்பிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதற்கான அவகாசத்தை வழங்குவதும், வழிமுறைகளை வகுப்பதும் வங்கிகளின் முடிவு தான். எனவே இதுகுறித்து வங்கிகளின் உயர்மட்ட குழு முடிவு செய்து அதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியிடுவர் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here