நாளுக்கு நாள் வீரியமாகும் கொரோனா தொற்று – உலகம் முழுவதும் 30 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!!

0

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றானது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16 கோடியை தாண்டியுள்ளது.

புதிய உலக சாதனையில் கொரோனா:

2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ துவங்கி முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் இதுவரை காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இறப்பு விகிதமும் நோய்வாய்ப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் உலக அளவில் இதுவரை 33 லட்சத்து 30 ஆயிரத்து 368 பேர் பலியாகியுள்ளனர்


இதில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 13.90 கோடியாகவும் நாளுக்கு நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இறப்பு விகிதம் கொரோனாவின் ஆபத்தினை தெரியப்படுத்துகிறது. தற்போது வரை மேலும் 106,288 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கொரோனா தோற்று உலகை அச்சுறுத்தும் கொடிய வைரஸாக மாறி வருகிறது. மேலும் அதிகமான இறப்பு விகிதத்தின் மூலம் புதிய சாதனை படைத்துள்ள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 160,307,797 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 138,047,682 பேர் குணமடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here