ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட புதிய அறிக்கை!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் - செப்டம்பர் முதல் இலவச பொருட்கள் ரத்து - மாநில அரசு அதிரடி முடிவு!!

தமிழ்நாட்டில் ஒரு வயிறு சோற்றுக்கு வழியில்லாத வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உதவுவதற்காக அரசு சார்பாக நியாய விலைக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகக் கிடைக்கிறது.

உணவுப் பொருட்களை மலிவு விலையிலும் இலவசமாகவும் நியாயவிலைக்கடையில் கிடைப்பதால் ஏழை மக்கள் உணவின்றி இருக்கும் நிலைமையை போக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சில முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார்.

அதாவது தமிழகத்தில் தொடர்ந்து அரிசி கடத்தல் அதிகமாகி கொண்டிருக்கிறது. அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி மற்றும் ஏனைய நிதிகளின் மூலமாக பகுதிநேர ரேஷன் கடைகள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here