‘இந்தியாவில் இனிமேல் இவர்களுக்கு பென்ஷன் பணம் கிடையாது’ – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

0

அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பென்ஷன் பணம்

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் அரசு இடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைப்பதில்லை என்று மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து தற்போது குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் கடந்த 1983 ம் ஆண்டு வரை அரசு பணியில் பணி புரிந்தவர் தான் பஹொலா ராம். இவருக்கு ராம்கு தேவி மற்றும் துர்கி தேவி என்ற இரு மனைவிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அதன் பிறகு குடும்ப ஓய்வூதியம் பணத்தை முதல் மனைவி ராம்கு தேவி பெற்று வந்தார்.

pension
pension

ஆனால் முதல் மனைவியும் கடந்த 2015ம் ஆண்டு இறந்துள்ளார். இதையடுத்து மரணத்தை அடுத்து குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்க வேண்டும் என பஹொலா ராமியின் 2வது மனைவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி, முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஓய்வூதியம் பெற அவருக்கு உரிமை இல்லை என்று இந்த மனுதாரருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here