பறவையின் மீது மோதிய ஏர் ஆசியா விமானம் – பெரும் விபத்து தவிர்ப்பு!!

0

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகி விமானிகள் உட்பட பல பயணிகள் பலியான நிலையில், ராஞ்சியில் ஏர் ஆசியா விமானம் ஒன்று புறப்படும் பொழுது பறவையின் மீது மோதியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விமான விபத்து:

நாட்டில் மற்றொரு விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டு உள்ளது. ராஞ்சியில் இருந்து மும்பைக்குச் செல்லும் ஏர் ஏசியா விமானம் (i5-632) புறப்பட்டபோது பறவை மோதியது. மும்பைக்குச் செல்லும் ஏர் ஏசியா விமானம் (i5-632) புறப்படும் போது ராஞ்சி விமான நிலையத்தில் பறவை ஒன்று பக்கவாட்டில் மோதியது என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். தற்போது அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

kerala plane crash
kerala plane crash

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஓடுபாதையை கடக்கும் போது பள்ளத்தில் மோதி இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதில் விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். தற்போது அதைப் போன்ற ஒரு கோர விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

ராஞ்சி ஏர் ஆசியா விமானம் தற்போது பரிசோதனையில் உள்ளது. விமானம் இயக்க அனுமதிக்கப்பட்ட பின்னர் விமானம் புறப்பட வேண்டும். ஏர் ஏசியா இந்தியா தங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் இந்த தாமதத்தால் ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here