நடிகர் கார்த்தியுடன் இணையும் “கர்ணன்” பட நடிகை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

“கர்ணன்” திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினை பெற்ற நடிகை ரஷிதா விஜயன் தற்போது நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ரஷிதா விஜயன்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் தனுஷ் நடிப்பிலும், மாரி செல்வராஜ் இயக்கத்திலும் வெளியான “கர்ணன்” திரைப்படத்தில் நடித்தவர் தான், ரஷிதா விஜயன். மலையாள நடிகையான ரஷிதா விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர். இவர் தமிழில் முதன் முதலாக “கர்ணன்” திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார்.

‘சனம் சொன்னதை அப்படியே செஞ்சுட்டீங்களே ஆரி’ – என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!

இந்த திரைப்படத்தில் இவர் மேக் அப் இல்லாமல் நடித்திருப்பது தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இத்துடன் தனது யதார்த்தமான நடிப்பினை ரஷிதா விஜயன் பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். இதன் காரணாமாக இவர் அடுத்து எந்த தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து அதற்கு பதில் தரும் வகையில் ரஷிதா விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியினை பதிவிட்டுள்ளார். அதாவது நடிகர் கார்த்தி நடிக்க இருக்கும் “சர்தார்” திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். “சர்தார்” திரைப்படத்தினை இயக்குனர் மித்ரன் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here