அல்லு அர்ஜுனுக்கு பாராட்டு தெரிவித்த சல்மான் – என்ன காரணம் தெரியுமா??

0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை தற்போது பாலிவுட் உலகின் ஜாம்பவான் சல்மான் கான் பாராட்டி ஒரு ட்வீட் செய்துள்ளாராம். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் சல்மான் கான்

ஒரு மொழியில் பிரபலமாகி ஹிட் அடிக்கும் திரைப்படத்தினை வேறு ஒரு மொழியில் டப் செய்வது அல்லது ரீமேக் செய்வது திரையுலகின் எதார்த்தம். அப்படி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடித்த திரைப்படம் தான், “டுவடா ஜகனந்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

‘சனம் சொன்னதை அப்படியே செஞ்சுட்டீங்களே ஆரி’ – என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!

இந்த திரைப்படத்தில் வேற லெவல் ஹிட் அடித்த பாடல் தான் “சீட்டிமார்”. இந்த பாடலிற்கு தற்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் மற்றும் திஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். “ராதே” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தினை பிரபு தேவா இயக்கி வருகிறார். இதனை அடுத்து இன்று ஹிந்தி “சீட்டிமார்” பாடல் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன் அளவிற்கு சல்மான் கானின் நடனம் இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து சாலமன் தனது ட்விட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுனை பாராட்டி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதே போல் அல்லு அர்ஜுனை பாதுகாப்பாக இருக்குமாறும், குடும்பத்தினை பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டி உள்ளார். இதனை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here