ராஜா ராணி 2 சீரியலில் முடிவுக்கு வரும் முக்கியமான கேரக்டர் – யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்!!

0
ராஜா ராணி 2 சீரியலில் முடிவுக்கு வரும் முக்கியமான கேரக்டர் - யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில்  நடித்து வரும் முக்கிய பிரபலம் ஒருவர், வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

உறைந்த ரசிகர்கள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் தற்போது, ஹீரோவின் தம்பி திருமணம் குறித்த சர்ச்சை பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஜெசி என்பவரை, கர்ப்பம் ஆக்கி விட்டு  தப்பி ஓட நினைத்த ஹீரோவின் தம்பி வசமாக சிக்குகிறார். வேற்று மதப் பெண் என்பதால், சிவகாமி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில் சிவகாமியின் கணவர், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதனால், மொத்த குடும்பமும் பதறி அடித்து கொண்டு மருத்துவமனை செல்ல, மருத்துவர்கள் எளிதில் கிடைக்காத பிளட் குரூப் தேவை என சொல்கின்றனர்.

அந்த பிளட் குரூப் தனக்கு உள்ளதாக ஜெசி முன்வருகிறார். ஆனால், இப்போது உங்களுக்கு மதம் தடையாக இல்லையா? என சந்தியா சிவகாமியிடம் கேள்வி கேட்கிறார். இப்படி அதிரடி காட்சிகள் சென்று கொண்டிருக்கும்போது, சிவகாமியின் கணவனாக நடித்து வரும் சைவம் ரவி, அப்போ நான் காலியா? என பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அர்த்தம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here