ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி பாலாஜி

ராஜா ராணி 2 சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்துகொண்டுள்ளது. அதாவது சந்தியா படித்தவர் என்ற உண்மையை போட்டுக்கொடுத்து வீட்டை விட்டே துரத்த போல முயற்சிகளை செய்து வருகிறார் அர்ச்சனா.

தனது அண்ணன் பொண்டாட்டி என்று கூட பார்க்காமல் சரவணனும் அதற்கு சப்போர்ட் செய்கிறார். ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்து வந்த செந்தில் அர்ச்சனாவின் பேச்சால் இந்த அளவிற்கு மாறியுள்ளார். இவர்களால் தான் கதைக்களம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது.

மேலும் சந்தியா, சரவணன் ஜோடியை விட அர்ச்சனா செந்தில் ஜோடி தான் டாப் ஹிட். இதில் செந்திலாக நடித்து வரும் பாலாஜி பிரபல யூடுப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர். அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே அவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலிலும் தனது பெஸ்டை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒருவேளை அவருக்கு உறவுக்காரராக இருக்குமோ என்றும் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here