அமெரிக்கா, சீனாவை ஓவர் டேக் செய்து முதலிடத்தில் இந்தியா.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவில் தான் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பொருட்களுக்கு இறக்குமதியின் போது அதிக வரி விதிக்கப்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால், பிற நோய்களுக்கு உண்டான மருந்துகளை காட்டிலும் சென்ற ஆண்டிலிருந்தே கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பொருட்களுக்கே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இரண்டாம் அலையில் இந்த தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
பல நாடுகள் இந்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி அல்லது இரண்டையுமே செய்கின்றனர். சமீபத்தில் மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் இந்தியா மற்ற உலக நாடுகளை விட அதிக இறக்குமதி வரி விதிப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கொரோனா மருத்துவ பொருட்களுக்கு இந்தியா, சீனாவுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கு அதிகமாகவும் இயக்குமதி வரி விதிக்கிறது. கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு இந்திய அரசு 15.2% இறக்குமதி வரி  விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here