Anti-virus ஐ கண்டுபிடித்த ஜான் மெக்காஃபி சிறையில் தூக்கிட்டு தற்கொலை…

0

Anti-virus மென்பொருளை கண்டுபிடித்த தொழிலதிபர் ஜான் மெக்காஃபி ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு சிறையில் நேற்று (ஜூன் 23,2021) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் மெக்காஃபி, இவர் ஒரு மென்பொருள் தொழிலதிபர். இவர் 1987 ஆம் ஆண்டில் உலகின் முதல் Anti Virus மென்பொருளை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு வரை இவர் நாசா, லாக்ஹீட் மார்டின் போன்ற முன்னனி நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் இவர் 2011 ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனத்திற்கு இவரது Anti Virus மென்பொருளை விற்றார்.

 

2014 மற்றும் 2018 காலகட்டத்தில் கிரிப்டோ கரன்ஸி முதலீடு  மற்றும் அவரது வாழ்க்கை கதைக்கான உரிமைகளை விற்றதன் மூலம் மில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டிய போதிலும் வேண்டுமென்றே வரி அறிக்கையை தாக்கல் செய்ய தவறியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கா வெளியிட்ட தரவுகளின்படி ஜான் மெக்காஃபி, 2014 – 2018 ஆம் ஆண்டில் 10 மில்லியன் யூரோக்களுக்கு மேல் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இவர் அமெரிக்காவிலிருந்து தப்பி ஸ்பெயினில் வாழ்ந்து வந்தார். ஆனால் அங்கு பிடிபட்டு ஸ்பெயின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  இவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க, ஸ்பெயின் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. அமெரிக்காவிற்கு சென்றால் காலம் முழுக்க சிறையிலேயே இருக்க வேண்டும் என்று இவர் ஏற்கனவே ஸ்பெயின் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இவர் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here