ஊத்தி மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட ராஜா ராணி 2 – முக்கிய நடிகர் விலகல்..,அப்போ அதோகதிதான்!

0

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்கள் பட்டியலில் இருக்கும் தொடர்களில் இருந்து தொடர்ச்சியாக சில பிரபல நடிகர்கள் வெளியேறிய வண்ணமாக இருக்கின்றனர். அதுவும் சின்னத்திரையில் ஹிட் அடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுப்பதற்காகவே விலகுகிறார்கள். அப்படி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி ஹரிபிரியன் திடீரென விலகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

அதனையடுத்து அதே சீரியலில் நடித்த சிலரும் அடுத்தடுத்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அது போலவே பாக்கியலட்சுமி தொடர் ராதிகா, செழியன் ரோலில் நடித்தவர்களும் விலகினர். அந்த வரிசையில் ராஜா ராணி 2 ல் சந்தியா ரோலில் நடித்த ஆலியாவும் கர்ப்பமான காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். ஆனாலும் அந்த சீரியலை அதில் நடிக்கும் ஹீரோ சித்துவுக்காகவே பலரும் இன்னும் வரை பார்த்து வருகின்றனர்.

இப்படி திருமணம் சீரியலில் தனது நடிப்பை தொடங்கிய சித்து, தற்போது பிரபல நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார். இவர் தற்போது வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுக்க இருப்பதால் சீரியலை விட்டு விலக முடிவு செய்துள்ளார். அட ஆமாங்க! ஆல்ரெடி சீரியல்ல ஆலியா விலகிய போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் பயங்கர அடி வாங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது பத்தாதுன்னு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா இரண்டு நாட்களுக்கு முன்பு விலகினார். இப்போ சித்துவும் விலகிவிட்டால் சீரியல் நிலைமை கேள்விக்குறிதான் என ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் ஆதங்கத்தை ஒரு பக்கம் தெரிவித்தாலும், சித்து ரசிகர்கள் அவரை பெரிய திரையில் பார்க்க அதீத ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here